புதுதில்லி: நாடாளுமன்றம் மற்றும் ஜந்தர் மந்தர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிச.14 முதல் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் போராட்டம், வெள்ளிக்கிழமை ஜந்தர் மந்தரில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அதிகாரிகள் போதிய அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சாலை தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வேண்டிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
146 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் மல்லிகார்ஜுன கார்கே, அரசின் சட்ட விரோதமான இந்த நடவடிக்கையை எதிர்த்து வெள்ளிக்கிழமை போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தார்.
இதையும் படிக்க: மழை பாதிப்பின்போது முதல்வர் எங்கே இருந்தார்? மத்திய நிதியமைச்சர்
டிச.13 அன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு அத்துமீறலைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


