பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நூறாண்டுகால பழக்கத்தை மீறி உஜ்ஜைனில் இரவு தங்கிய ம.பி. முதல்வர்

உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஸ்வர் கோவிலில் முதல்வர் ஒருவர் இரவில் தங்கக் கூடாது என்ற நூறாண்டு கால எழுதப்படாத பழக்கத்தை மாற்றி, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இரவு தங்கியிருந்தார்.

News image
Updated On :23 டிசம்பர் 2023, 12:48 pm

DIN

உஜ்ஜைன்: உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஸ்வர் கோவிலில் முதல்வர் ஒருவர் இரவில் தங்கக் கூடாது என்ற நூறாண்டு கால எழுதப்படாத பழக்கத்தை மாற்றி, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இரவு தங்கியிருந்தார்.

அதாவது, மத்திய பிரதேச மாநிலத்தை ஆள்பவர் சுவாமி மகாகாளேஸ்வரர் என்ற நம்பிக்கை அங்கு பரவலாகவே உள்ளது. எனவே, அந்த மாநிலத்தில் வழக்கமாக, முதல்வர் யாரும், கோயிலில் இரவு தங்குவதில்லை. ஆனால், கடந்த சனிக்கிழமை இரவு மகாகாளேஸ்வர் கோயிலுக்குச் சென்ற மோகன் யாதவ், இரவு தங்கியிருந்து, நூறாண்டு கால பழக்கத்தை மாற்றியுள்ளார்.

ஞாயிறன்று கோயிலில் பேசிய மோகன் யாதவ், மத்திய பிரதேசத்தின் மன்னர் மகாகாளேஸ்வரர்தான். நாம் அனைவரும் அவரது பிள்ளைகள் என்றார்.

கடந்த 1812ஆம் ஆண்டில்தான் வரலாற்றின் நிகழ்வு ஒன்று திரித்து, ஆள்பவர்கள் யாரும் கோயிலில் இரவு தங்கக் கூடாது என்ற அச்சம் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.