நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஹைதராபாத்தில் மோசமான வானிலை: பெங்களூரு,மும்பை திரும்பிய 2 விமானங்கள்!

பெங்களூரு,மும்பையில் இருந்து ஹைதராபாத் சென்ற இரண்டு பயணிகள் விமானங்கள், மோசமான வானிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் பெங்களூரு,மும்பைக்கு திரும்பியது.

News image
Updated On :25 டிசம்பர் 2023, 6:00 am

DIN

புது தில்லி: பெங்களூரு,மும்பையில் இருந்து ஹைதராபாத் சென்ற இரண்டு பயணிகள் விமானங்கள், மோசமான வானிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் பெங்களூரு, மும்பைக்கு திரும்பியது.

மும்பையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டுச் சென்ற யுகே837 என்ற பயணிகள் விமானம் திங்கள்கிழமை காலை புறப்பட்டு ஹைதராபாத் சென்றது. ஆனால் ஹைதராபாத்தில் மோசமான வானிலை காரணமாக ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் காலை 9.15 மணியளவில் மும்பை விமான நிலையத்துக்கு திரும்பி வந்தது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் சென்ற யுகே897 என்ற இரண்டாவது விமானமும் மோசமான வானிலை காரணமாக திருப்பி விடப்பட்டு பெங்களூரு விமான நிலையத்திற்கே திரும்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.