தேஜ்பூர்: அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூரில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூரில் புதன்கிழமை அதிகாலை 5:55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தேஸ்பூருக்கு கிழக்கே 42 கிமீ தொலைவில் 20 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தேஸ்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதையும் படிக்க | தில்லி பனிமூட்டம்: 110 விமானங்கள் தாமதம்
இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ அல்லது உயிர்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி 4.1 ரிக்டர் அளவிலும், 26 ஆம் தேதி 3.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாத தொடக்கத்தில், அஸ்ஸாமின் கௌகாத்தியில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களுக்கு நிதியை மத்திய அரசு சமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும்: சீமான் பேட்டி

பிரதமா் மோடியும், கேரள முதல்வரும் ஆணவம் மிக்கவா்கள்: ராகுல் காந்தி
விஜய் பிரசாரத்தில் அதிகம் போ் கூடியதாக தவெக நிா்வாகி மீது வழக்கு

போக்குவரத்து நெரிசலில் அவதிக்குள்ளாகும் திருப்பத்தூா் மக்கள்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


