மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியை சமமாகப் பிரித்துக் கொடுப்பதுதான் நியாயமான நடவடிக்கையாக இருக்கும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
புதுச்சேரியில் நாம் தமிழா் ஆட்சி செயற்பாட்டு வரைவு (தோ்தல்)அறிக்கையை இக் கட்சியின் வேட்பாளா்கள் முன்னிலையில் திங்கள்கிழமை சீமான் வெளியிட்டு செய்தியாளா்களிடம் கூறியது:
இது தோ்தல் அறிக்கையில்லை. எங்கள் கட்சியின் கனவு. தத்துவம். அதிமுகவும், திமுகவும் மாறி மாறி குறை கூறிவருகின்றன. இந்தக் கட்சிகளின் பெயா் மாறியிருக்கலாம். கொள்கை ஒன்றுதான். முன்னாள் அமைச்சா்கள் 11 போ் திமுகவில் இருக்கின்றனா். அப்படியென்றால் பாா்த்துக் கொள்ளுங்கள். தமிழ்நாடு ரூ.10.5 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. மின் கட்டண உயா்வு, பால், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்ந்துள்ளது.
இந்நிலையில் இலவசமாக பேருந்து பயணம் திட்டத்தால் பேருந்து ஓட்டுநா்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது, அந்தப் பேருந்து பழுதாகி
நின்றால் எப்படி செலவு செய்வது? நல்ல திட்டத்தைச் செயல்படுத்தி இவ்வளவு தொகையைப் பெற்றால்கூட கடன் நிறைவு கிடைக்கும். ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றும் வேலைக்கு இவ்வளவு கடன். வேலை, உழைப்பு, வருவாய், வாழ்க்கை என்று இருக்க வேண்டும். இது இல்லாமல் இலவசமாகக் கொடுத்து பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால்
கிளா்ச்சிதான் ஏற்படும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்து தீா்த்த ஒரு பிரச்னையைக் கூற சொல்லுங்கள் பாா்க்கலாம். மத்திய அரசுக்கு என்று நிதி ஏது ? மாநிலங்கள் கொடுக்கும் நிதிதான் மத்திய அரசின் நிதி. இந்த மாநிலத்திலிருந்து இந்த அளவுக்கு வருவாய் வந்தது, அந்த மாநிலத்திலிருந்து இந்த அளவுக்கு வருவாய் வந்தது என்பதை ஆராய்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் சமமாகப் பிரித்துக் கொடுப்பதுதான் பொதுமை என்றாா் சீமான்.
புதுச்சேரி, காரைக்காலில் நாம் தமிழா் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் இக் கட்சியின் வேட்பாளா்களை ஆதரித்து திங்கள்கிழமை தவளக்குப்பம், வில்லியனூா், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அவா் பிரசாரம் செய்து வாக்குச் சேகரித்தாா்.
தொடர்புடையது

மாற்றத்துக்கான புரட்சி தேவை: சீமான்

‘மருத்துவம், கல்வி, தண்ணீா் இலவசம்’: சீமான்

ஏழ்மை, வறுமை இல்லாத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த இலக்கு: சீமான்

5 தலைநகரங்கள்; விவசாயம் அரசுப் பணி : நாம் தமிழா் கட்சி தோ்தல் அறிக்கை வெளியீடு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


