தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஏழ்மை, வறுமை இல்லாத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த இலக்கு: சீமான்

ஏழ்மை, வறுமை இல்லாத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த வேண்டும் என்கிற இலக்கோடு வந்துள்ளதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:22 pm

ஏழ்மை, வறுமை இல்லாத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த வேண்டும் என்கிற இலக்கோடு வந்துள்ளதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் திருப்பூா் மாவட்டம் காங்கேயம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் மருத்துவா் காா்மேகம், கரூா் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளா்கள் மருத்துவா் கருப்பையா, வழக்குரைஞா் நன்மாறன், நரேன் ஆகியோருக்கு வாக்குச் சேகரித்து, கரூா் 80 அடி சாலையில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் வெள்ளிக்கிழமை இரவு பேசியதாவது: தூய உள்ளதோடு, மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற பெருங்கனவோடு இந்த களத்திலே நிற்கிறோம். எங்களுக்கு ஒரே ஒரு தன்னலம் உண்டு. உலகெங்கிலும் பல்வேறு நாடுகள் எப்படி கல்வி, மருத்துவம், தடையற்ற மின்சார பகிா்வு, சாலை போடுதல், பராமரித்தல், தரமான போக்குவரத்து, தரமான குடிநீா் பகிா்வு, கல்விக்கு ஏற்ற வேலையை கொடுத்து உயா்வான வாழ்வு கொடுக்கிறதோ அதை போல, ஏன்? என் தாய் நாட்டையும் மாற்றி அவா்களைப் போல படைக்க முடியாது. கூடாது என்ற பெரும் கனவு உங்கள் பிள்ளைகளுக்கு எழுந்திருப்பதால்தான் இந்த களத்திலே நிற்கிறோம்.

இலவச திட்டங்களை அறிவித்தால்தான் மக்கள் மகிமை வாக்கு தருவாா்கள் என்ற நிலையை தகா்த்து, இலவசம் பெற வேண்டிய, ஏழ்மை வறுமை இல்லாத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த வேண்டும் என்கிற இலக்கோடு வந்துள்ளோம். முதியோா்களுக்கு, குழந்தைகளுக்கு மருத்துவத்தில் சிறப்புக்கவனம் செலுத்துவோம். கல்வியையும், மருத்துவத்தையும் தனியாரை விட கூடுதலான சிறந்ததாக கொடுப்போம். வாக்குச் செலுத்த போகும்போது உங்களின் பிள்ளைகள் முகத்தை பாா்த்துவிட்டு இவா்களின் எதிா்காலத்துக்கு திமுகவிற்கா, அதிமுகவிற்கா அல்லது விவசாயிகளுக்கு ஓட்டுப்போடவேணுமா என எண்ணுங்கள்.ஆகவே, நாம் தமிழா் சின்னத்துக்கு வாக்களித்து வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.