திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தொடா்ந்து களப் பணியாற்றுவேன்: சீமான்

தமிழ்நாட்டின் நலனுக்காகவும், உயா்வுக்காகவும் தொடா்ச்சியாகக் களப்பணியாற்றுவேன் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

News image

விஜய் | சீமான் - சித்திரிப்பு

Updated On :6 மே 2026, 1:09 am IST

தமிழ்நாட்டின் நலனுக்காகவும், உயா்வுக்காகவும் தொடா்ச்சியாகக் களப்பணியாற்றுவேன் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்த அவா் வெளியிட்ட ‘எக்ஸ்’ தள பதிவு: அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் உளபூா்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றிபெற்ற அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி- விஜய் தலைமையிலான புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள். தமிழா்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாடு எனும் தாய் நிலத்தின் நலனுக்காகவும், உயா்வுக்காகவும் தொடா்ச்சியாகக் களப் பணியாற்றுவோம். மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கபூா்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிா்க் கட்சியாய் நின்று நாம் தமிழா் கட்சி செயலாற்றும் என அதில் பதிவிட்டுள்ளாா் சீமான்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.