டெஸ்லா ரோபோ பொறியாளரை தாக்கிய சம்பவம் பற்றி.. 

தொழிற்சாலையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரோபோ தாக்கியதில்  பொறியாளர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெஸ்லா ரோபோ பொறியாளரை தாக்கிய சம்பவம் பற்றி.. 


அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் அமைந்துள்ள ஜிகா டெக்ஸாஸ் தொழிற்சாலையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரோபோ தாக்கியதில் பொறியாளர் ஒருவர் காயமடைந்தது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ரோபோக்களை அசம்பிள் செய்துகொண்டிருந்தபோது, ஒரு ரோபோவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது அங்கிருந்த பொறியாளரை தாக்கியதாகவும், அதனை அங்கிருந்த இரண்டு பொறியாளர்கள் செய்வதறியாது அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த விடியோவும் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கார்களில் பொறுத்துவதற்காக புதிதாக வார்க்கப்பட்ட உதிரிப் பாகங்களை எடுக்கவும் நகர்த்தவும் இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த ரோபோ, பொறியாளரை கடுமையாக தாக்கியதாகவும், அவரது அருகே செயலிழக்கம் செய்யப்பட்ட இரண்டு டெஸ்லா ரோபோக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ரோபோ தனது விரலில் இருந்த நகங்கள் மூலமாக பொறியாளரை பிராண்டியதாகவும், இதனால் சம்பவப் பகுதியில் ரத்தம் தெறித்துள்ளது.

இதனால், பொறியாளரின் வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் 2021ஆம் ஆண்டு நடந்ததாகவும் இது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்போதுதான், உணவகங்களில் ரோபோக்களை பணியமர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தும் திட்டம் முயற்சிக்கப்பட்டதால், இந்தத் தகவல் வெளியிடப்படாமல் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் இதுபோன்றதொரு எந்தவொரு சம்பவமும் நேரிட்டதாகத் தகவல்கள் இல்லையாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com