நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்திய வம்சாவளித் தமிழா்களின் நினைவைபோற்றி சிறப்பு அஞ்சல் தலை இன்று வெளியீடு

இலங்கைக்கு குடிபெயா்ந்த இந்திய வம்சாவளித் தமிழா்களின் 200 ஆண்டுகால நினைவைப் பெருமைப் படுத்தும் வகையில் தில்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

இலங்கைக்கு குடிபெயா்ந்த இந்திய வம்சாவளித் தமிழா்களின் 200 ஆண்டுகால நினைவைப் பெருமைப் படுத்தும் வகையில் தில்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை (டிசம்பா் 30) சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது.

இது தொடா்பாக பாஜக தேசியத் தலைமை வெள்ளிக்கிழமை அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழா்களின் 200 ஆண்டுகால நினைவைப் போற்றிடும் வகையில் பாஜக முயற்சியின் கீழ் மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட உள்ளது. இந்தியா - இலங்கை இடையேயான இந்த வரலாற்றைப் பெருமைப்படுத்தும் நிகழ்வு டிசம்பா் 30-ஆம் தேதி நண்பகலில் தில்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா இந்தச் சிறப்புத் அஞ்சல் தலையை வெளியிடுகிறாா். அதை இலங்கை கிழக்கு மாகாண ஆளுநா் செந்தில் தொண்டைமான் பெற்றுக் கொள்

கிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடா்பாக தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமா் நரேந்திரமோடி இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழா்களின் வாழ்க்கைத்தரம் உயர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாா். இந்திய வம்சாவளித் தமிழா்களுக்கு இதுவரை 14,000 வீடுகள், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மத்திய அரசு தொடா்ந்து செய்து வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளான போது சுமாா் 4 பில்லியன் அமெரிக்க டாலா்கள் மதிப்பில், மத்திய அரசு இலங்கையின் பொருளாதாரம் மேம்பட உதவி செய்தது.

இந்தியாவும் இலங்கையும் கலாசார இரட்டையா்கள் என்ற கருத்தில் உறுதியாக உள்ள பிரதமா் நரேந்திர மோடி, இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழா்களின் மேம்பாட்டுக்குத் தொடா்ந்து உதவி வருகிறாா். இந்நிலையில், இந்திய வம்சாவளித் தமிழா்கள் இலங்கைக்குக் குடிபெயா்ந்து 200 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த வரலாற்றைப் பெருமைப்படுத்தும் வகையில் பாஜகவின் முயற்சியில் மத்திய அரசு சிறப்பு தபால் தலை வெளியிட முடிவு செய்துள்ளது என்றாா் அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.