மங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமானம் ஒன்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம கும்பல் மின்னஞ்சல் வழியாக மிரட்டல் விடுத்துள்ளனர். 
கோப்புப்படம்.
கோப்புப்படம்.

கர்நாடக மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

'விமான நிலையத்திற்குள் இருக்கும் விமானம் ஒன்றில் வெடிகுண்டு வைத்துவிட்டோம், இன்னும் சில மணி நேரங்களில் அது வெடிக்கும்' என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த புதன்கிழமை காலை 11.20 மணியளவில் இந்த இணைய மிரட்டலைக் கண்ட விமான நிலைய அதிகாரிகள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து முழு பாதுகாப்பு சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

'நாங்கள் ஒரு தீவிரவாதக் குழு. எங்கள் பெயர் ஃபன்னிங்' என அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.  நாட்டின் பல்வேறு சர்வதேச விமான நிலையங்களுக்கு இதுபோன்ற மின்னஞ்சல் வழி வெடிகுண்டு மிரட்டல்கள்  தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com