கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் லாலன் சிங் ராஜிநாமா

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் பதவியை லாலன் சிங் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

News image
Updated On :29 டிசம்பர் 2023, 11:36 am

DIN

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் பதவியை லாலன் சிங் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. அப்போது கட்சியின் தேசியத் தலைவர் பதவியை லாலன் சிங் ராஜிநாமா செய்தார்.

கூட்டத்தில் பேசிய லாலன் சிங் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் எனது சொந்த தொகுதியில் பிசியாக இருப்பதால், கட்சியின் தேசிய தலைவர் பதவியை ராஜிநாமா செய்கிறேன் என்று தெரிவித்தார். 

தொடர்ந்து அந்த பதவிக்கு பிகார் முதல்வர் நிதீஷ்குமார் பெயரை அவர் பரிந்துரைத்தார். அவரது ராஜிநாமாவை ஏற்ற கட்சி மேலிடம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதீஷ் குமார் செயல்படுவார் என்று அறிவித்தது. ​​

இதைத்தொடர்ந்து கூட்டணி, கூட்டணியில் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அனைத்து அதிகாரமும் நிதீஷ் குமார் வசம் சென்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.