ஜனவரி 1 முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்க வேண்டாம்: அரசுத் துறைகளுக்கு ஹிமாச்சல் முதல்வர் உத்தரவு!

ஜனவரி 1 முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்க வேண்டாம் என்று ஹிமாச்சலப் பிரதேச அரசுத் துறைகளுக்கு அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

2024 ஜனவரி 1 முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்க வேண்டாம் என்று ஹிமாச்சலப் பிரதேச அரசுத் துறைகளுக்கு அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உத்தரவிட்டுள்ளார்.

இ-வாகனங்களை ஊக்குவிப்பதற்கும் மற்றும் 'பசுமையான ஹிமாச்சல்' என்ற இலக்கை அடைவதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை எந்த துறையாவது பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களை வாங்க வேண்டுமெனில் அதுகுறித்து மாநில அமைச்சரவையிடம் அனுமதி பெற வேண்டும்.

’பசுமை மற்றும் தூய்மையான ஹிமாச்சல்' என்ற இலக்கை அடைவதற்கான முன்னெடுப்பாக, 2024 ஜனவரி 1 முதல் டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்களை வாங்க வேண்டாம் என்று முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அனைத்து அரசுத் துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறியதாவது, “அரசின் தொடர் முயற்சியால், அரசு இ-வாகனங்களின் எண்ணிக்கை 185 ஆகவும், தனியார் இ-வாகனங்களின் எண்ணிக்கை 2,733 ஆகவும் ஹிமாச்சலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எங்களது அரசாங்கம் ஹிமாச்சலில் மின் வாகனங்களை பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. போக்குவரத்துத் துறையானது முழுவதுமாக மின்னணு வாகனங்களைக் கொண்ட முதல் துறையாக உள்ளது. மற்ற துறைகளும் அதைப் பின்பற்ற வேண்டும்.

அனைத்து துறைகளும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளில் இயங்கும் வாகனங்களை படிப்படியாக மின் வாகனங்களாக மாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

இ-வாகனங்களின் பயன்பாடு ஒரு புதிய தொடக்கம் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் இ-வாகனங்களின் பயன்பாடு காட்டும்” என்று முதல்வர் சுக்விந்தர் சிங் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com