சென்னை: பாஜக மகளிரணி தேசிய செயலராக இருந்த வழக்குரைஞர் விக்டோரியா கௌரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக்க எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்குரைஞர்கள் குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளனர்.
வெறுப்புணர்வை துண்டும் வகையில் வழக்குரைஞர் விக்டோரியா கௌரி பேசிய பேச்சுகள் யூடியூப் தளங்களில் இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக நிர்வாகியாக இருந்த விக்டோரியா கௌரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் 21 மூத்த வழக்குரைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கொலீஜியம் அளித்த பரிந்துரையை திரும்பப் பெறக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியத்துக்கும் மூத்த வழக்குரைஞர்கள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று வழக்குரைஞர் விக்டோரியா கௌரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டாம் என்றும் பரிந்துரையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் குடியரசுத் தலைவருக்மகும் என்ஜிஆர் பிரசாத், ஆர். வைகை உள்பட 21 மூத்த வழக்குரைஞர்கள் கையெழுத்திட்டு மனு அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

