மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்தியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி வைக்கவுள்ள பிரதமர்!

இந்தியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை கர்நாடகத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 6) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். 

News image
Updated On :4 பிப்ரவரி 2023, 11:18 am

இந்தியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை கர்நாடகத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 6) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தினுடைய இந்த கிரீன்ஃபீல்டு ஹெலிகாப்டர் நிறுவனம் முதலில் இலகு ரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: 615 ஏக்கர் பரப்பளவில் இந்த ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனம் அமையவுள்ளது. இந்த புதிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் வருகை இந்தியாவின் ஹெலிகாப்டர் தேவைக்கு தீர்வாக அமையும். ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் 15 டன் எடையுள்ள 1000 ஹெலிகாப்டர்களை அடுத்த 20 ஆண்டுகளில் தயாரிக்க உள்ளது. இதற்கு 4 லட்சம் கோடி செலவாகும். இந்த புதிய முடிவின் மூலம் இந்தியாவுக்கு இலகு ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படும் ஹெலிகாப்டர்கள் கிடைக்கும்.

இந்த ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனம் பெங்களூருவிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமையவுள்ளது. சுயசார்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (பிப்ரவரி 6) தொடங்கி வைக்க உள்ளார். இந்த ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.