பிரதமர் மோடி ஒரு உலகத் தலைவர்: மாநில செயற்குழு தீர்மானத்தில்  பாஜக புகழாரம்!

பிரதமர் மோடி ஒரு உலகத் தலைவர்: மாநில செயற்குழு தீர்மானத்தில் பாஜக புகழாரம்!

ஹிமாசலில் பாஜக மாநில செயற்குழு தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு  உலகத் தலைவர் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
Published on

ஹிமாசலில் பாஜக மாநில செயற்குழு தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு  உலகத் தலைவர் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

பண்டைய இந்தியாவின் ’ஒரே உலகம் ஒரே குடும்பம்’ என்ற கருத்து பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் கீழ் சாத்தியமாகி வருவதாகவும் அந்த தீர்மானத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. 

ஹிமாசலின் மாநில பாஜக செயற்குழு தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியா ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ள இந்த தருணத்தில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெறுவதற்கு இந்தியா பெருமைப்பட வேண்டும். இந்த ஜி-20 மாநாட்டில் ஒரே பூமி ஒரே குடும்பம் என்ற கருத்தை இந்தியா பிரபலப்படுத்தும். உலகில் உள்ள அனைத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு நம்மிடம் ஆற்றல் உள்ளது. பாஜக தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள். உலகின் மிகப் பெரிய கட்சியின் தேசியத் தலைவர் ஹிமாசலைச் சேர்ந்தவர் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.

நமது பாரம்பரியங்கள் மற்றும் கலாசாரங்களை வெற்றிகரமாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் உருவாக்கி வருகிறது. ராமர் பிறந்த இடத்தில் பெரிய அளவிலான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. ஸ்ரீ காசி விஸ்வநாத அணையின் மேம்பாடு மற்றும் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது போன்ற செயல்பாடுகளும் அதில் அடங்கும். வரலாற்றை சரியாக மக்களுக்கு எடுத்துச் செல்வது மிக முக்கியத் தேவையாக இன்று உருவெடுத்துள்ளது. இதனை பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com