ஒவ்வொன்றுக்கும் சிபிஐ-யை வழிநடத்திக் கொண்டிருக்க முடியாது: கொல்கத்தா நீதிமன்றம்

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் நடந்த பல கோடி மோசடி வழக்கில், ஒவ்வொன்றுக்கும் மத்திய புலனாய்வு அமைப்பை வழிநடத்திக் கொண்டிருக்க முடியாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் நடந்த பல கோடி மோசடி வழக்கில், ஒவ்வொன்றுக்கும் மத்திய புலனாய்வு அமைப்பை வழிநடத்திக் கொண்டிருக்க முடியாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது நன்றாக இல்லை, வழக்கு விசாரணையின் ஒவ்வொரு நடைமுறைக்கும் நீதிமன்றமே வழிநடத்த வேண்டும் என்பது. உங்கள் வேலையை நீங்களே செய்யுங்கள். இந்த வழக்கில், யாரை விசாரிக்க வேண்டும் என்பதைக் கூட நீதிமன்றமே சொல்ல வேண்டுமா? நாள்தோறும் நீதிமன்றத்துக்கு வருகிறீர்கள், எங்கள் அறிவுரையைக் கேட்டுக் கொண்டு சென்றுவிடுகிறீர்கள். இந்த நடைமுறை தொடரக் கூடாது. உண்மையின் அடிப்படையில் செயல்படுங்கள் என்று நீதிபதி சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞரிடம் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை ஏன் சிபிஐ தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

லஞ்சப் பணத்தைக் கொடுத்தவர்களும், லஞ்சம் பெற்றவர்களும் சமமான குற்றவாளிகளே. ஏன் அவர்களை எல்லாம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரிக்கக் கூடாது? ஏன் இந்த வழக்கில் சிபிஐக்கு இவ்வளவு தயக்கம்? இந்த வழக்கில் கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணம் தற்போது எங்கு வேண்டுமானாலும் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com