புதுதில்லி: 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான ரகசியங்களை அக்கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அசல் எல்லை கோட்டு பகுதியில் 1996 ஆம் ஆண்டில் பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ள நிலையிலும், 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியில் இருந்து சீனா படைகளை விலகிக்கொள்ளும் வரையில், சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பை ஒரு ராணுவக் கூட்டணியாக மாற்ற இந்தியா பணியாற்ற வேண்டும்.
Till China withdraws from post 2014 occupied land across mutually agreed 1996 LAC, India should work to make QUAD a military alliance against China. If Modi has any, as yet undisclosed, compulsions in dealing with China, he should voluntarily disclose it. BJP must win in 2024
â Subramanian Swamy (@Swamy39) February 5, 2023
சீனாவை எதிர்கொள்வதற்கான, இதுவரை வெளியிடப்படாத ரகசிய தகவல்கள், நிர்ப்பந்தங்கள் ஏதேனும் பிரதமர் நரேந்திர மோடி வைத்திருக்கிறார் என்றால், அதை அவர் தானாக முன்வந்து அவற்றை வெளியிட வேண்டும். அப்படி செய்யும்போது, 2024 இல் மக்களவைத் தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்புத் தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறவனத்தின் பதிலை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்திருந்த சுப்ரமணியன் சுவாமி, அதானி குழுமத்துக்கு எதிராக கயிறு இறுகுகிறதா? இதனை மோடியால் தாங்கிக்கொள்ள முடியுமா? என்று தனது கருத்தினை சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









