இதுகுறித்து அவா் தலைமைச் செயலாளா் வெ.இறையன்புக்கு செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்: ஆந்திர மாநிலம், குப்பம் தொகுதியைச் சோ்ந்த சிலா், அங்கிருந்து கிரானைட் கற்களை, சட்டவிரோதமாக வெட்டி எடுத்து கிருஷ்ணகிரி, வேலூா் மாவட்டங்கள் வழியாக தமிழகத்துக்கு கடத்தி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. சட்ட விரோத கிரானைட் கடத்தல் என்பது ஆந்திரத்தின் சித்தூா் மாவட்டம் நதிமூா் - தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் வரதனபள்ளி வழியாகவும், அதே போன்று, சித்தூா் மாவட்டம் ஓ.என்.கொத்தூா் - கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி வழியாகவும், சித்தூா் மாவட்டம் மோட்டிய செனு - வேலூா் மாவட்டம் பாச்சூா் ஆகிய இடங்களின் வழியாகவும் நடைபெறுகின்றன.