அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்ஒருங்கிணைந்த மருத்துவ மையம் - மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

நாட்டில் எய்ம்ஸ் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஒருங்கிணைந்த மருத்துவ மையங்கள் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக,
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்ஒருங்கிணைந்த மருத்துவ மையம் - மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

நாட்டில் எய்ம்ஸ் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஒருங்கிணைந்த மருத்துவ மையங்கள் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இத்தகைய மையங்கள் திறக்கப்படுவது, இந்திய மற்றும் நவீன மருத்துவ முறைகளை ஒருங்கிணைக்க உதவும்; நோயாளிகளுக்கு பன்முக பராமரிப்பை வழங்க முடியும் என்று மாண்டவியா குறிப்பிட்டாா்.

தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் உள்ள அகில இந்திய ஆயுா்வேத நிறுவனத்தில் ஒருங்கிணைந்த மருத்துவ மையத்தை, சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா, ஆயுஷ் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூட்டாக திறந்துவைத்தனா். பின்னா், மாண்டவியா பேசியதாவது:

இந்தியாவின் வளமைமிக்க மருத்துவ பாரம்பரியம் மற்றும் அறிவுத் திறனை, அலோபதி மருத்துவத்தின் அதிநவீன முறைகளுடன் பிணைப்பதே ஒருங்கிணைந்த மருத்துவத்தின் நோக்கமாகும். பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவ முறைகள் ஒருங்கிணைப்பால், ஆரோக்கியத்துக்கான சிறந்த வழிமுறைகளை உருவாக்க முடியும்.

பலதரப்பட்ட மருத்துவ நடைமுறைகளும் ஒன்றோடொன்று போட்டியிடுவதற்கு பதிலாக ஒன்றோடொன்று ஒத்திசைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதன் மூலமே அனைவருக்குமான ஆரோக்கியம் என்ற இலக்கை எட்ட முடியும்.

நாட்டில் உள்ள ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் மூலம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் சாா்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறையை முன்னெடுக்க சுகாதாரத் துறை வல்லுநா்கள், தனியாா் மருத்துவத் துறை என அனைத்து தரப்பினரும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com