அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ரத்த வகை வேறு; இருவருக்கும் எச்ஐவி: அரிதான சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை

மகாராஷ்டிர மாநிலத்தில், எச்ஐவி பாதித்த ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடந்துள்ளது. 

News image
Updated On :8 பிப்ரவரி 2023, 12:16 pm

DIN


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில், எச்ஐவி பாதித்த ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக இதுபோன்ற அரிதான அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஔரங்காபாத்தைச் சேர்ந்த  48 வயதான பஞ்சு வியாபாரிக்கு சிறுநீரக அறுவைசிகிச்சை நடந்தது. வழக்கம் போல அவரது 45 வயது மனைவிதான் தனது சிறுநீரகத்தை தானமளித்தார்.

ஆனால், இரண்டு விஷயங்கள் இந்த அறுவைசிகிச்சையை செய்தியாக்கியிருக்கிறது. காரணம், இருவருமே எச்ஐவி பாதித்தவர்கள். இவரின் ரத்த வகையும் வேறு வேறு. மனைவியின் ரத்த வகை பி, கணவரின் ரத்த வகை ஏ. 

இந்த அறுவைசிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பு, மருத்துவர்கள் குழு பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தனர். இறுதியாக அறுவைசிகிச்சை கடந்த மாதம் நடந்துள்ளது.

எச்ஐவி பாதித்த நபருக்கு சிறுநீரக தானம் பெறப்பட்டுள்ளது. ஆனால் வேறு ரத்த வகையைச் சேர்ந்தவரிடமிருந்து அல்ல. இதுதான் இந்த அறுவைசிகிச்சையை சவாலாக்கியது.

நோயாளியின் உடல், சிறுநீரகத்தை ஏற்காமல் போய்விடும் ஆபத்து இருந்ததால், அதற்குரிய சில சிகிச்சைகளும் முன்கூட்டியே தரப்பட்டன. ஏற்கனவே எச்ஐவி வாதித்தவர்களுக்கு எதிர்ப்பாற்றல் குறைவாகத்தான் இருக்கும். அவர்களது எதிப்பாற்றலை மேலும் குறைக்கும் மருந்துகள் தரப்பட வேண்டும். இதனால் அவர்கள் நலமாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. இத்தனை சவால்களையும் தாண்டி இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

நல்லவேளையாக இருவரும் நன்கு குணமடைந்துவிட்டனர். வீடு திரும்பி இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இதற்கான செலவுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், தன்னார்வலர்களிடமிருந்து ரூ.4 லட்சமும் பெறப்பட்டு அறுவைசிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.