தில்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி விசாரணையில் பஞ்சாபைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் மல்ஹோத்ராவை அமலாக்க இயக்குநரகம் புதன்கிழமை கைது செய்தது.
பஞ்சாபின் ஒயாசிஸ் குழுவுடன் தொடர்புடைய மல்ஹோத்ரா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் குற்றப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
மல்ஹோத்ரா பஞ்சாப் மற்றும் வேறு சில பிராந்தியங்களில் மதுபான வியாபாரத்துடன் தொடர்புடையவர் ஆவார்.
கலால் கொள்கை 2021-22-ஐ அமல்படுத்தியதில் சிசோடியா கோடிக்கணக்கில் ஊழல் புரிந்ததாக எதிா்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியது. இதன்பேரில், சிசோடியா உள்ளிட்ட 15 போ் மீது சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்டில் வழக்குப் பதிவு செய்தனா்.
தில்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.