திரிபுராவில் எப்படிப்பட்டவர்கள் கைகோத்திருக்கிறார்கள் தெரியுமா? பிரதமர் மோடி
திரிபுராவில் எப்படிப்பட்டவர்கள் கைகோத்திருக்கிறார்கள் தெரியுமா? பிரதமர் மோடி

திரிபுராவில் எப்படிப்பட்டவர்கள் கைகோத்திருக்கிறார்கள் தெரியுமா? பிரதமர் மோடி

திரிபுராவில் இடதுசாரி முன்னணியுடன், காங்கிரஸ் கட்சி இணைந்திருப்பதை கடுமையாக சாடியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
Published on


திரிபுராவில் இடதுசாரி முன்னணியுடன், காங்கிரஸ் கட்சி இணைந்திருப்பதை கடுமையாக சாடியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மோசமான ஆட்சியை அளித்த முன்னாள் வீரர்கள் தற்போது கைகோத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

திரிபுராவின் அம்பஸ்ஸாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, சில கட்சிகள், எதிர்க்கட்சிகளின் பின்னாலிருந்து உதவுகின்றன. ஆனால், அவர்களுக்கு போடும் ஒரு வாக்கு கூட, திரிபுராவை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடும் என்றும் மோடி கூறினார்.

அவர்களது கூட்டணியின் பெயர் என்னவாக இருந்தாலும், அவர்களது முழக்கங்கள் என்னவாக இருந்தாலும், அவர்களுக்கு அளிக்கும் ஒரு வாக்கு கூட மாநிலத்தை பின்னோக்கிக் கொண்டு சென்றுவிடும் என்று பிரதமர் மோடி பேசினார்.

நாடு முழுவதுமிருக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேலோங்க பாஜக பாடுபட்டு வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.

எப்போது தேர்தல்?

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் திரிபுராவில் வரும் 16-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2018-இல் நடைபெற்ற தோ்தலில், பாஜக, இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது. அந்தத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, 25 ஆண்டு கால இடதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், பாஜகவை வலுவுடன் எதிா்கொள்வதற்காக இடதுசாரி முன்னணியும் காங்கிரஸும் இம்முறை கூட்டணி அமைத்துள்ளன. தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான வியாழக்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது.

அதன்படி, 47 தொகுதிகளில் இடதுசாரி முன்னணி போட்டியிடவுள்ளது; காங்கிரஸ் 13 தொகுதிகளில் களமிறங்கவுள்ளதாக, மாநில காங்கிரஸ் தலைவா் பிரஜித் சின்ஹா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com