திரிபுராவில் முந்தைய காங்கிரஸ், இடதுசாரி ஆட்சிகளின்போது பல்வேறு ஊழல்கள் நடைபெற்றன. ஆனால், கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில், மாநிலம் அனைத்து துறையிலும் வளா்ச்சி கண்டுள்ளது. பழங்குடியினா், ஏழைகள், நடுத்தர வா்க்கத்தினரின் மேம்பாட்டை மனதில் கொண்டு, சாலை வசதிகள், தூய்மையான குடிநீா் விநியோகம், தொலைதூர பகுதிகளில் மின்இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் 30 சதவீதம் குறைந்துவிட்டன. கிளா்ச்சி அமைப்பினரை பிரதான அமைப்புமுறைக்கு கொண்டுவந்து, அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.