மும்பை ஐஐடியின் 7வது மாடியிலிருந்து முதலாமாண்டு மாணவர், குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஐடியில் சேர்ந்து மூன்று மாதங்களே ஆன நிலையில், சாதிய அடக்குமுறை காரணமாகவே மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக சக மாணவர்கள் காவல் துறையிடம் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது முதலாமாண்டு மாணவர் தற்கொலை செய்துள்ளார். ஐஐடி வளாகத்தின் 7வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாணவரின் விடுதி அறையில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். எனினும் தற்கொலைக்கான எந்தவொரு தரவுகளும் கிடைக்கவில்லை.
ஐஐடியில் மூன்று மாதங்களுக்கு முன்பு மாணவர் சேர்ந்துள்ளார். கடந்த சனிக்கிழமை தேர்வுகள் முடிந்துள்ளன. தேர்வு அழுத்தம் தொடர்பாக மாணவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
சக மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஐஐடியில் நிலவிய சாதிய அடக்குறையால், மனமுடைந்திருந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பை ஐஐடி இயக்குநர் சுபாஷிஷ் செளத்ரி தெரிவித்துள்ளதாவது, 18 வயதேயான முதலாமாண்டு மாணவனின் இழப்பை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மாணவனின் மரணம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனின் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரின் குடும்பத்துக்கு வலிமை கிடைக்க வேண்டிக்கொள்கிறோம். மாணவரின் ஆன்மா சாந்தியடையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை ஐஐடியில் அடிக்கடி இதுபோன்ற வகுப்புவாத அடக்குமுறை மரணங்கள் நடப்பதாக அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டம் குற்றம்சாட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


