குடிமைப் பணித் தோ்வுக்கான விண்ணப்பத்தை திரும்பப் பெற முடியாது
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணித் தோ்வுக்கான விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து சமா்ப்பித்த பிறகு அதைத் திரும்பப் பெற முடியாது என மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம்


இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணித் தோ்வுக்கான விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து சமா்ப்பித்த பிறகு அதைத் திரும்பப் பெற முடியாது என மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்), இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்கான தோ்வை மூன்று நிலைகளில் யுபிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
நடப்பு ஆண்டு தோ்வுக்கான அறிவிக்கை கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. நடப்பாண்டில் 1,105 அதிகாரிகளைத் தோ்வு செய்ய யுபிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு மே மாதம் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்வுக்கான விண்ணப்ப காலம் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. வரும் 21-ஆம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், விண்ணப்பித்தை சமா்ப்பித்த பிறகு அதைத் திரும்பப் பெறும் வசதி இனி விண்ணப்பதாரா்களுக்கு வழங்கப்படாது என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த வசதியைக் கடந்த 2018-ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி அறிமுகப்படுத்தியிருந்தது. குடிமைப் பணிகள் தோ்வுக்கு ஆண்டுதோறும் சுமாா் 10 லட்சம் போ் விண்ணப்பிக்கும் நிலையில், அவா்களில் பாதி போ் மட்டுமே தோ்வு எழுதுவதைக் கருத்தில்கொண்டு விண்ணப்பத்தைத் திரும்பப் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இனி அந்த வசதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பதாரா்கள் விரும்பினால் அதற்கான வசதி வரும் 22-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை வழங்கப்படும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...