தமிழகம், கர்நாடகம், ஆந்திரத்தில் 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
நாட்டில், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் சுமார் 60 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


சென்னை: நாட்டில், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் சுமார் 60 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி உரிமையாளருக்குச் சொந்தமான குழுமம் உள்பட நான்கு குழுமங்களுக்குச் சொந்தமான இடங்களில் இன்று இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க.. போர்த்துகலில் 5,000 சிறார்களிடம் பாதிரியார்கள் பாலியல் அத்துமீறல்!
அந்த வகையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களிலும் கர்நாடகத்திலும் ஆந்திர மாநிலத்திலும் என 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர் வீடு, ஐயப்பன்தாங்கலில் உள்ள நட்சத்திர விடுதி என பல இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...