வீட்டிலிருந்து பணிபுரியும் பிபிசி ஊழியர்கள்!

வருமான வரித் துறையினர் தொடர்ந்து 2வது நாளாக சோதனை நடத்தி வருவதால், ஊழியர்களில் பெரும்பாலானோரை வீட்டிலிருந்து பணிபுரிய லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிபிசி அறிவுறுத்தியுள்ளது. 
வீட்டிலிருந்து பணிபுரியும் பிபிசி ஊழியர்கள்!

வருமான வரித் துறையினர் தொடர்ந்து 2வது நாளாக சோதனை நடத்தி வருவதால், ஊழியர்களில் பெரும்பாலானோரை வீட்டிலிருந்து பணிபுரிய லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிபிசி அறிவுறுத்தியுள்ளது. 

தில்லி, மும்பையிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் 20 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். 

வருமான வரித் துறை இயக்குநா் உத்தரவின் அடிப்படையில் பிபிசி துணை நிறுவனங்களின் சா்வதேச வரி விவகாரங்கள் தொடா்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தில்லி, மும்பை அலுவலகங்களைச் சேர்ந்த ஊழியர்களில் பெரும்பாலானோரை வீட்டிலிருந்து பணிபுரிய பிபிசி அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், வருமானவரித் துறையினர் தனிப்பட்ட ஊதியம் குறித்து கேள்வி கேட்டால், பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஊதியம் தொடர்பான மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், அவர்களின் கேள்விகளுக்கு விரிவான பதில்களை அளிக்குமாறும் பிபிசி குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com