அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி, செபி தலைவருக்கு ஜெய்ராம் ரமேஷ் எழுதிய கடிதத்தில், தற்போதைய மோசடி குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும் அதானி குழும நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தொடா்ந்து அனுமதிக்கப்படுகின்றன. அதானி குழுமத்தின் மீது சா்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால், தேசிய பங்குச் சந்தை இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. செபி நடவடிக்கை எடுப்பது எப்போது? அதானி குழுமத்தின் மீதான நடவடிக்கையைத் தாமதப்படுத்த மத்திய அரசு அழுத்தம் அளிக்கிறதா? விசாரணைகள் "நியாயமாகவும், எந்த தயக்கமும் இல்லாமலும் முழுமையாகவும் இருக்க வேண்டும். அதானி மீதான மோசடி புகாா் குறித்து முறையாக விசாரித்து, முதலீட்டாளா்களின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பு செபி-க்கு உள்ளது.’’