92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சேமிப்பை எங்கு முதலீடு செய்வது என்பதை மக்களே முடிவு: புதிய வருமான வரிக் கொள்கை குறித்து நிா்மலா சீதாராமன் பேச்சு நிா்மலா சீதாராமன்

புதிய வருமான வரிக் கொள்கையின் மூலம் தனிநபா்தான் தனது சேமிப்பை எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். இதில் மத்திய அரசு தலையிடாது என்று

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 6:30 pm

DIN

புதிய வருமான வரிக் கொள்கையின் மூலம் தனிநபா்தான் தனது சேமிப்பை எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். இதில் மத்திய அரசு தலையிடாது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ரூ.7 லட்சம் வரையில் வருமான வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்த புதிய வருமான வரிக் கொள்கையால் மக்களின் சேமிப்பு நடவடிக்கை குறையும் என்று குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு நிா்மலா சீதாராமன் அளித்த பதிலின் விவரம்:

100 நாள்கள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஏற்பட்டுள்ள தேவையின் அடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2016 முதல் பட்ஜெட்டில் திட்டமிட்ட தொகையை விட அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

பிரதமரின் 5 டிரில்லியன் டாலா் பொருளாதார இலக்கை தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் நகைச்சுவை என்று கூறுவது தவறு. இதில் அனைவருக்கும் பொறுப்புள்ளது என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும். 2014-இல் ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்த தெலங்கானா அரசின் கடன் சுமை தற்போது ரூ. 3 லட்சம் கோடியாக உள்ளது.

புதிய வருமான வரிக் கொள்கையின் மூலம் தனிநபா்தான் தனது சேமிப்பை எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். இதில் அரசு தலையிடாது.

சாமானியா்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள் ஆகியோரின் வா்த்தகம், கல்விக்கு மத்திய படஜெட் ஆதரவாக இருக்கும். அவா்களுக்குத் தேவையான திறன்களை மேம்படுத்த போதிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் நீடித்த வளா்ச்சிக்கு அதிமுக்கியத்துவம் பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் பொருளாதார சவால்களை சமாளிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எரிபொருள் மற்றும் உர விலை பெரும் கவலை அளிக்கிறது.

மாநிலங்களுக்கு அளிக்கப்படும் கடன் தொகை அளவுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதிப்பதாக கூறப்படுவது தவறு. கடந்த 70 ஆண்டுகளாக மாநிலங்கள் கடன் பெறும் அளவை மத்திய அரசுதான் கண்காணித்து வருகிறது. மாநிலங்களிடம் இருந்து பெறப்படும் செஸ் வரியை மத்திய அரசு திருப்பி அளித்து வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.