கர்நாடகத்தில் ராமர் கோயில் கட்டப்படும்: பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகத்தில் உள்ள ராமநகரத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையில் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.


கர்நாடகத்தில் உள்ள ராமநகரத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையில் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் 2023- 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. கர்நாடக முதல்வரும் நிதித்துறை அமைச்சருமான பசவராஜ் பொம்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது, கர்நாடகத்தில் உள்ள ராமநகரத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என அறிவித்துள்ளார். இதற்கு பாஜகவினர் வரவேற்பு தெரிவித்தனர்.
மறுபுறம், கர்நாடகத்தில் ஆளும் பாஜக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட் வாக்குறுதிகளையே இன்னும் நிறைவேற்றவில்லை என்று கூறி காங்கிரஸ் தலைவர் சித்தராமையா உள்ளிட்ட எம்எல்ஏக்கள் காதில் பூ வைத்து அமர்ந்திருக்கின்றனர்.
காதில் பூவுடன் அமர்ந்திருக்கும் சித்தராமையா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...