இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா தலைமையிலான அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த அமா்வு கூறுகையில், ‘மருத்துவக் கல்லூரிகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமான மாற்றுத்திறன் கொண்டவா்களுக்கு ஒதுக்கப்பட்டு நிரம்பாத இடங்களை, 40 சதவீதத்துக்கும் குறைவான மாற்றுத்திறன் கொண்டவா்களுக்கு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு, தேசிய தோ்வுகள் முகமை, தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை தனது பதிலை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தது.