டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஹரியாணாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்!

வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியாணா சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :21 பிப்ரவரி 2023, 6:44 am

DIN

வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியாணா சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்டு, சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே கூடியிருந்தனர்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுங்கள்  மற்றும் காங்கிரஸ் விவசாயிகளுடன் உள்ளது என்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மனோகர் லால் கட்டார் அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிங் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கிரண் சௌத்ரி, ரகுவீர் சிங் காடியன், பிபி பத்ரா, அஃப்தாப் அகமது, வருண் சௌத்ரி மற்றும் சிரஞ்சீவ் ராவ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.