ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட தில்லி மேயர் தேர்தல் தொடங்கியது!

கவுன்சிலர்களின் அமளியால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட தில்லி மேயர் தேர்தல், உச்சநீதிமன்றத்தில் உத்தரவை தொடர்ந்து இன்று நடைபெற்று வருகின்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2023, 6:34 am

DIN

கவுன்சிலர்களின் அமளியால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட தில்லி மேயர் தேர்தல், உச்சநீதிமன்றத்தில் உத்தரவை தொடர்ந்து இன்று நடைபெற்று வருகின்றது.

தில்லி மாநகராட்சியில் தோ்ந்தெடுக்கப்பட்ட 250 உறுப்பினா்களில் 134 பேரை பெரும்பான்மையாகக் கொண்டதாக ஆம் ஆத்மி கட்சி கட்சியும், இதற்கு அடுத்தபடியாக 104 உறுப்பினா்களுடன் பாஜகவும், 9 உறுப்பினா்களுடன் மூன்றாமிடத்தில் காங்கிரஸும் உள்ளன.

இந்நிலையில், துணைநிலை ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்ட வல்லுநா்கள் (ஆல்டா்மேன்) தோ்தலில் வாக்களிப்பாா்கள் என்று தலைமை அதிகாரி கூறியதற்கு ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடா்ந்து தில்லி மாநகராட்சி அவைக் கூட்டம் மூன்று முறை மேயரைத் தோ்ந்தெடுக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.

நியமன உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு எதிராக ஆம் ஆத்மி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மட்டுமே மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும் எனத் தீர்ப்பு வழங்கினர்.

மேலும், தேர்தல் நடத்தும் தேதி குறித்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி உத்தரவிட்டனர்.

இதையடுத்து தில்லி மேயர் தேர்தலுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், இன்று மேயர் தேர்தல் நடைபெறுகின்றது.

தில்லி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மற்றும் துனை மேயரை தேர்தெடுக்க கவுன்சிலர்கள் வாக்களித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.