தில்லி மேயராகியிருக்கும் ஷெல்லி ஓபராய் யார் தெரியுமா?

தில்லி மேயர் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. தில்லி பல்கலையின் உதவிப் பேராசிரியர் ஷெல்லி ஓபராய், ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சியின் முதல் மேயராகியிருக்கிறார். 
தில்லி மேயராகியிருக்கும் ஷெல்லி ஓபராய் யார் தெரியுமா?

தில்லி மேயர் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. தில்லி பல்கலையின் உதவிப் பேராசிரியர் ஷெல்லி ஓபராய், ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சியின் முதல் மேயராகியிருக்கிறார். 

தில்லி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (பிப்.22) பதிவான 266 வாக்குகளில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஒபராய் 150 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகளையும் பெற்றனர்.

இதன்மூலம் 34 வாக்குகள் வித்தியாசத்தில் தில்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, தில்லி மேயராக ஷெல்லி ஓபராய் தேர்வாகியிருக்கிறார்.

தில்லி மாநகராட்சி கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு பெண் மேயரை பெற்றுள்ளது. கடைசியாக 2011ஆம் ஆண்டு தில்லி மாநகராட்சித் தேர்தலில் ரஜ்னி அப்பி தில்லி மேயராக தேர்வு செய்யப்பட்டிருந்ததுதான் கடைசி.

ஷெல்லி ஓபராய், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின் கீழ் இயங்கும் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச கருத்தருங்குகளில் பங்கேற்று விருதுகளை வென்றவர். இந்திய வர்த்தக சங்க மாநாட்டில் தங்கப் பதக்கத்தை (பேராசிரியர் மனுபாய் ஷா விருது)  வென்றுள்ளார்.

அது மட்டுமல்லாமல், இந்திய வர்த்தக சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஏற்கனவே மிஸ் கமலா ராணி பரிசையும் வென்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி மாநகராட்சித் தோ்தல் கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்தலில் தில்லி மாநகராட்சியின் மொத்தம் உள்ள 250 வாா்டுகளில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் 134 வாா்டுகளில் வெற்றி பெற்றது.

15 ஆண்டு காலம் மாநகராட்சியில் அதிகாரத்தில் இருந்த பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com