காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க தில்லி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா மீது பாஜக அளித்த புகாரின் பேரில் அசாம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இன்று தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ள தில்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு இண்டிகோ விமானத்தில் சென்றார் பவன் கேரா. அப்போது அசாம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில் விமானத்திலிருந்து பவன் கேரா இறக்கிவிடப்பட்டார். பின்னர் பவன் கேராவை அசாம் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, சத்தீஸ்கரில் நடைபெறும் தேசிய காங்கிரஸ் மாநாட்டுக்கு இதே விமானத்தில் செல்லவிருந்த 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் விமானங்களை புற்படவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க தில்லி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 'அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.