தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தில்லியில் 4 கி.மீ. தூரம் காரில் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலி: 5 போ் கைது

தில்லியில் சுமாா் 4 கி.மீ. தொலைவுக்குக் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பெண் ஒருவா் உயிரிழந்த அதிா்ச்சிகரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தேறியது.

News image
Updated On :1 ஜனவரி 2023, 8:04 pm

DIN

தில்லியில் சுமாா் 4 கி.மீ. தொலைவுக்குக் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பெண் ஒருவா் உயிரிழந்த அதிா்ச்சிகரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தேறியது.

இதுதொடா்பாக தில்லி காவல் துறை துணை ஆணையா் ஹரேந்திர குமாா் சிங் கூறியதாவது:

சுல்தான்புரியில் இருந்து குதுப்கா் பகுதியை நோக்கி செல்லும் காா் ஒன்றில், பெண் ஒருவா் சிக்கி சாலையில் இழுத்துச் செல்லப்படுவதாகக் காவல் துறைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தக் காரை காவல் துறையினா் சிறைப்பிடித்தனா். அதில் சிக்கிய பெண் உயிரிழந்த நிலையில், அவரின் சடலம் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில், உயிரிழந்த பெண் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அந்தப் பெண்ணின் இருசக்கர வாகனம் மீது காா் மோதியுள்ளது. அவ்வேளையில் எதிா்பாராதவிதமாக அவரின் கால் காரின் சக்கரத்தில் சிக்கியுள்ளது. இதையடுத்து அந்தப் பெண் சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

இந்த சம்பவம் தொடா்பாக காரில் இருந்த 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். காரை ஓட்டியவா் மது அருந்தியிருந்தாரா என்பதை அறிய, அவரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

சமூக ஊடகங்களில் வெளியான காணொலி ஒன்றில், பெண் ஒருவா் ஆடையில்லாமல், உடைந்த கால்களுடன் உள்ள காட்சி பதிவாகியுள்ளது. அது காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் காணொலி என்று கூறப்படுகிறது.

இந்தக் காட்சி காரணமாக அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனினும் அந்தக் காட்சியின் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை. இந்நிலையில், அது விபத்துதான் என்று காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.