ராகுல் நடைப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்: ராகேஷ் திகைத்

ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.
ராகுல் நடைப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்: ராகேஷ் திகைத்

ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்(பாரத் ஜோடோ யாத்ரா) நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7-ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தலைநகர் தில்லியை அடைந்துள்ளது.

புத்தாண்டு ஓய்வுக்கு பிறகு நாளை மீண்டும் தொடங்கும் நடைப்பயணம் உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக பஞ்சாபை கடந்து காஷ்மீர் சென்றடைகிறது.

இந்நிலையில், உ.பி., பஞ்சாபில் நடைபெறும் நடைப்பயணத்தில் பங்கேற்க மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டிற்கு மேல் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற விவசாய சங்கங்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து ராகேஷ் திகைத் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர்களால் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நடைப்பயணத்தில் நான் பங்கேற்க மாட்டேன். அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் பங்கேற்க எந்த தடையும் இல்லை.

ஆனால், மாவட்ட தலைவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் பங்கேற்க அனுமதியில்லை.

எங்கள் அமைப்பு அரசியல் சார்பற்றது. பல்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் எங்கள் அமைப்பில் உள்ளனர். காங்கிரஸ் அரசு உள்பட அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com