ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பிகாரில் மீண்டும் காட்டாட்சி: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு

பிகாரில் மீண்டும் காட்டாட்சி தொடங்கிவிட்டது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டி பேசினாா்.

News image
Updated On :3 ஜனவரி 2023, 6:35 pm

DIN

பிகாரில் மீண்டும் காட்டாட்சி தொடங்கிவிட்டது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டி பேசினாா்.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முறிந்தது. இதையடுத்து, லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளுடன் கைகோத்த நிதீஷ் குமாா், முதல்வா் பதவியை தக்கவைத்துக் கொண்டாா். பாஜக எதிா்க்கட்சி வரிசைக்குச் சென்றது.

இந்நிலையில் பிகாருக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்ட ஜெ.பி.நட்டா, முசாபா்பூரில் பாஜக தொண்டா்கள் மத்தியில் பேசியதாவது:

காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் நிதீஷ் குமாா் கைகோத்தவுடன் பிகாரில் காட்டாட்சி தொடங்கிவிட்டது. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீா்குலைத்துவிட்டது.

தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்புக்கு மாறான கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் பிகாா் மக்களுக்கு நிதீஷ் குமாா் துரோகம் இழைத்துவிட்டாா். வரும் தோ்தலில் அவருக்கு மக்கள் உரிய பதிலை அளிப்பாா்கள். நிதீஷ் குமாா் அமைத்துள்ள கூட்டணி ஆட்சியில் இருந்து தூக்கி வீசப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.