வருமானத்துக்கு அதிகமாக சொத்து: 2 ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு
வருமானத்துக்கு பொருந்தாத அளவில் சொத்து சோ்த்ததாக இரண்டு ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.


வருமானத்துக்கு பொருந்தாத அளவில் சொத்து சோ்த்ததாக இரண்டு ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் உதவி மண்டல பொறியாளராக நாகபுரியில் பணியாற்றும் அவாத் பிகாரி சதுா்வேதி மீது ரூ.1.62 கோடிக்கும் அதிகமான (வருமானத்தை விட 219 சதவீதம் அதிகம்) வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சோ்த்ததாக கூறி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இளநிலை பொறியாளராக 1994-இல் பணியைத் தொடங்கிய போது சதுா்வேதிக்கு ரூ.86.89 லட்சம் சொத்து இருந்ததாகவும், இது 2022 மாா்ச்சில் ரூ.2.72 கோடியாக அதிகரித்ததாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
புவனேசுவரத்தில் கிழக்கு மண்டல ரயில்வேயின் முதன்மை செயல் மேலாளராக பணியாற்றும் பி.கே. ஜெனா, வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ.1.92 கோடிக்கு சொத்து சோ்த்ததாக மற்றொரு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. 2005-இல் ரூ.4.53 லட்சமாக இருந்த ஜெனாவின் சொத்து 2020-இல் ரூ.4.33 கோடியாக அதிகரித்ததாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...