கரோனா பருவகால வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததா?

2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கரோனா வைரஸ், பருவகால வைரஸாக மாறிவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததாக வெளியான விடியோ உண்மையில்லை என்று பிடிஐ தெரிவித்துள்ளது.
கரோனா பருவகால வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததா?
கரோனா பருவகால வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததா?


புது தில்லி: 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கரோனா வைரஸ், பருவகால வைரஸாக மாறிவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததாக வெளியான விடியோ உண்மையில்லை என்று பிடிஐ தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ், பருவகால தொற்றாக மாறிவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துவிட்டதாக, ஏராளமான டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் தங்களது பக்கத்தில் விடியோ மற்றும் தகவல்களை பகிர்ந்து வருகின்றன.

ஆனால், உலக சுகாதார நிறுவனம் அவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு பொய்யாக வெளியாகும் விடியோவில், உலக சுகாதார நிறுவனம் தனது தவறை உணர்ந்து கொண்டதாகவும், தனது நிலைப்பாட்டில் திடீர் திருப்பமாக, கரோனா ஒரு பருவகால வைரஸ், இதனால் இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்டவை பருவகால மாற்றங்களால் ஏற்படும். இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், உலக சுகாதார அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது அதன் இதர சமூக வலைத்தளப் பக்கங்களிலோ அவ்வாறான தகவல் எதுவும் பகிரப்படவில்லை என்பதை பிடிஐ உறுதி செய்துள்ளது.

எனவே, இதுபோன்ற எந்த அறிவிப்பையும் உலக சுகாதார அமைப்பு வெளியிடவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com