பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பூஜ்ய டிகிரி செல்சியஸ்! கடும் குளிரால் வடமாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடமாநிலங்களின் பல பகுதிகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. 

News image
Updated On :6 ஜனவரி 2023, 10:40 am

DIN

வடமாநிலங்களின் பல பகுதிகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. 

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடமாநிலங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ய டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. 

ராஜஸ்தானின் சுரு பகுதியில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் தில்லியின் அயநகர் பகுதியில் 1.8 டிகிரி செல்சியஸும், பஞ்சாபின் அமிர்தசரஸில் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. வழக்கத்தை விட குளிர் அதிகமாக உள்ளதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.