ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்தவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி பாட்டியாலா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 26ஆம் தேதி நியூ யார்க் - தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது மது சங்கர் மிஸ்ரா என்பவர் சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறியது.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து 11 நாள்களுக்குள் டிசம்பர் 6ஆம் தேதி தில்லி - பாரீஸ் சென்ற மற்றொரு ஏர் இந்தியா விமானத்திலும் மது அருந்திய நபர் ஒருவர் பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
இந்த இரு சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்த பிறகு சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தில்லி - பாரீஸ் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால், நியூ யார்க் - தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த நபருக்கு 30 நாள்கள் விமானத்தில் பறப்பதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்தவரை கைது செய்யாதது குறித்து விளக்கம் அளிக்கக்கோரி தில்லி காவல் துறை, விமான போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியாவுக்கு தில்லி மகளிர் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கிடையே வெளிநாட்டுக்கு சங்கர் மிஸ்ரா தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பெங்களூருவில் இருந்த சங்கர் மிஸ்ராவை நேற்றிரவு கைது செய்த காவல்துறையினர் தில்லி அழைத்து வந்து பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சங்கர் மிஸ்ராவுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

'அடோப்' நிறுவன சிஇஓ சாந்தனு ராஜிநாமா!

உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்! எப்படி செய்வது?

மதுரை சர்வதேச விமான நிலையம்! அரசாணை வெளியீடு!

இணையத்தைக் கலக்கும் இன்ஸ்டா சிறுவர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

