மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வீட்டில் துப்பாக்கிகள் வைத்திருந்த முன்னாள் எம்எல்ஏ கைது!

வீட்டில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த அசாம் மாநில முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :7 ஜனவரி 2023, 10:38 am

வீட்டில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த அசாம் மாநில முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

அசாம் மாநிலத்தின் சப்பாகுரி சட்டப்பேரவையின் உறுப்பினராக கடந்த 2011 முதல் 2016 வரை பதவி வகித்தவர் ஹிதேஷ் பாசுமதி. இவரது வீட்டில் துப்பாக்கிகள் இருந்த குற்றச்சாட்டிற்காக இன்று காலை கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து கோக்ரஜர் மாவட்ட கண்காணிப்பாளர் கூறுகையில்,

முன்னாள் எம்எல்ஏ வீட்டிலிருந்து ஏகே வகை துப்பாக்கி, எம்-16 ரைப்பிள் துப்பாக்கி, அதற்கான குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.