தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனாவில் இறந்த மனைவிக்காக ரூ.25 லட்சத்தில் சிலிகான் சிலை 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கரோனாவால் உயிரிழந்த தனது மனைவிக்கு ரூ.25 லட்சம் செலவில் சிலிகான் சிலை செய்து, அதற்கு தங்க நகைகளைப் போட்டு அழகுபார்க்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி.

News image

கரோனாவில் இறந்த மனைவிக்காக ரூ.25 லட்சத்தில் சிலிகான் சிலை 

Updated On :7 ஜனவரி 2023, 12:34 pm


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கரோனாவால் உயிரிழந்த தனது மனைவிக்கு ரூ.25 லட்சம் செலவில் சிலிகான் சிலை செய்து, அதற்கு தங்க நகைகளைப் போட்டு அழகுபார்க்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி.

ஓய்வு பெற்ற மத்திய அரசுப் பணியாளர் சாண்டில்யா (65). இவரது மனைவி இந்திராணி கரோனாவால் உயிரிழந்துவிட்ட நிலையில், அவரைப் பிரிந்து வாழ முடியாமல் தவித்து வந்த சாண்டில்யா, ரூ.25 லட்சம் செலவிட்டு, அவரைப் போன்றே அழகிய சிலிகான் சிலை செய்து வீட்டில் அவர் எப்போதும் விரும்பி அமரும் இடத்தில் சிலையை வைத்துள்ளார்.

அந்த சிலைக்கு அவரது ஆடை, அணிகலன்களைப் போட்டு அழகுப்பார்த்தும் வருகிறார்.

இது எனது மனைவியின் விருப்பம் என்று கூறும் சாண்டில்யா, ஒருவேளை எனக்கு முன் அவள் இறந்துவிட்டால், எனது சிலையை செய்து வீட்டில் வைத்துக் கொள்ளும்படி சொன்னால். அவளது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்த சிலையை செய்திருக்கிறேன் என்கிறார் சாண்டில்யா.

முதலில் எனது குடும்பத்தினர் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால், எனது விருப்பத்தை உறுதியாகத் தெரிவித்ததால் ஏற்றுக் கொண்டனர்.

தனது மனைவியுடனான கடைசி நாள்கள் குறித்து அவர் கூறுகையில், 39 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். 2021 மே 4ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இருவருக்கும் கரோனா வந்து, நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தேன். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் என்னால் செல்ல முடியவில்லையே என்று வருத்தமடைந்தேன். அதன் பிறகு அவள் திரும்பவேயில்லை. இப்போது அவரது சிலையுடன் வாழ்கிறேன் என்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.