மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

பாஜக கங்கையைப் போல; குளித்து பாவங்களைப் போக்குங்கள்: திரிபுரா முதல்வர்

பாஜக கங்கை நதி போன்றது எனவும், இடதுசாரி தலைவர்கள் அதில் மூழ்கி குளித்தால் அனைத்துப் பாவங்களும் நீங்கிவிடும் எனவும் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். 

Published On :

பாஜக கங்கை நதி போன்றது எனவும், இடதுசாரி தலைவர்கள் அதில் மூழ்கி குளித்தால் அனைத்துப் பாவங்களும் நீங்கிவிடும் எனவும் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.

தெற்கு திரிபுராவின் கக்ரபனில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பாஜக வெற்றி பெறும். நான் மக்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். இன்னும் ஸ்டாலின் மற்றும் லெனின் ஆகியோரின் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் பாஜகவில் இணைய வேண்டும். ஏனென்றால், பாஜக கங்கை நதி போன்றது. கங்கையில் புனித நீராடினால் உங்களது அனைத்துப் பாவங்களும் நீங்கிவிடும்.

தொடர்வண்டியில் காலியான இருக்கைகள் இன்னும் இருக்கின்றன. காலியாக இருக்கும் இடங்களில் வந்து அமர்ந்து கொள்ளுங்கள். பிரதமர் நரேந்திர மோடி நாம் எங்கு செல்ல வேண்டுமோ அங்கே சரியாக அழைத்துச் செல்வார். பல ஆண்டுகளாக திரிபுரா மக்களின் உரிமைகளை கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கிவிட்டனர். கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தில் மக்களாட்சி என்ற ஒன்று இல்லை. அவர்கள் வன்முறை மற்றும் தீவிரவாத உத்திகளில் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களது ஆட்சியின்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் 69 பேர் கொல்லப்பட்டனர். கக்ரபனும் அரசியல் சார்ந்த கொலைகளுக்கு விதிவிலக்கல்ல என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.