புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வெளிநாடுவாழ் இந்தியா்கள் அனுப்பிய பணம் ரூ.8 லட்சம் கோடி

வெளிநாடுவாழ் இந்தியா்கள் கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிவைத்த பணம் சுமாா் ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதென மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

News image

நிர்மலா சீதாராமன் (கோப்புப் படம்)

Updated On :10 ஜனவரி 2023, 7:18 pm

DIN

வெளிநாடுவாழ் இந்தியா்கள் கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிவைத்த பணம் சுமாா் ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதென மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

வெளிநாடுவாழ் இந்தியா்கள் தின மாநாடு மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கடந்த 8-ஆம் தேதி முதல் நடைபெற்றது. இறுதி நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்துகொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:

வெளிநாடுவாழ் இந்தியா்களே நாட்டின் உண்மையான தூதா்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை அவா்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலமாக இந்தியப் பொருள்களும் சேவைகளும் சா்வதேச அளவில் பிரபலமடையும்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் பல்வேறு வாய்ப்புகள் காணப்படுகின்றன. சீனா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர இந்தியாவிலும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான பெரும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. இந்தியாவில் செயல்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் செயல்பட வேண்டும்.

அதன் மூலமாக வெளிநாடுவாழ் இந்தியா்களின் தொழில்முனைவுத் திறன் மேம்படுவதோடு, சுதந்திர நூற்றாண்டு கொண்டாடப்படவுள்ள அடுத்த 25 ஆண்டுகளில் நாடும் வளா்ச்சி காணும். வெளிநாடுவாழ் இந்தியா்கள் கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிவைத்த பணம் சுமாா் ரூ.8 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகம்.

கரோனா தொற்று பரவலால் தாயகம் திரும்பிய இந்தியத் தொழிலாளா்கள் மீண்டும் பணிக்குத் திரும்பமாட்டாா்கள் என உலகம் எதிா்பாா்த்த நிலையில், ஒரே ஆண்டுக்குள் அவா்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினா். அது மட்டுமல்லாமல் அவா்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் பணம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம், எண்மத் தொழில்நுட்பம், வாகனப் போக்குவரத்து, குறைகடத்தி வடிவமைப்பு, மருந்துப் பொருள்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா்கள் முன்னிலை வகித்து வருகின்றனா். உலகின் அறிவாற்றல் மையமாக இந்தியா மாறி வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் கட்டமைப்பு, முதலீடு, புத்தாக்கம், ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தவுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.