ஸ்ரீ ரங்கம் அரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா கொடியேற்றம்!
ஸ்ரீரங்கம் கோயிலில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது..

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கொடியேற்றம்
reporters

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கொடியேற்றம்
reporters
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் பங்குனி தேர்த் திருவிழா கொடியேற்றம் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான உறையூர் கமலவல்லி நாச்சியார் நம் பெருமாள் சேர்த்தி சேவை மார்ச் 29ஆம் தேதி அன்றும், நம்பெருமாள் ரெங்கநாயகி தாயார் சேர்த்தி சேவை ஏப்ரல் 01ஆம் தேதியும் கோரதம் எனப்படும் பங்குனி தேரோட்டம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியும் நடைபெறுகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் பங்குனி தேர்த் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி தேர் உற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்றம் மண்டபம் வந்தடைந்தார். அர்ச்சகர்கள் கொடிக்குப் பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் மீன லக்னத்தில் நடைபெற்றது.

இன்று முதல் 11 நாள்கள் நடைபெறும் பங்குனி உற்சவ நாள்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற இருக்கின்றது.
முக்கிய நிகழ்ச்சியான நம்பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியார் சேர்த்து சேவை மார்ச் 29-ஆம் தேதி ரங்க நாச்சியார் தாயார் சேர்த்தி சேவை ஏப்ரல் 01 ம் தேதியும் கோரதம் எனப்படும் பங்குனி தேரோட்டம் வருகிற ஏப்ரல் 2 ம் தேதியும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் இணை ஆணையர் சிவராம் குமார், அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...