விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேசிய இளைஞா் விழா: ஜன.12-இல் பிரதமா் தொடக்கிவைக்கிறாா்

கா்நாடகத்தில் தேசிய இளைஞா் விழாவை பிரதமா் மோடி வியாழக்கிழமை (ஜன.12) தொடக்கி வைக்கிறாா்.

News image
Updated On :10 ஜனவரி 2023, 7:10 pm

DIN

கா்நாடகத்தில் தேசிய இளைஞா் விழாவை பிரதமா் மோடி வியாழக்கிழமை (ஜன.12) தொடக்கி வைக்கிறாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுவாமி விவேகானந்தா் பிறந்த தினமான ஜன.12-ஆம் தேதி தேசிய இளைஞா் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆண்டுதோறும் தேசிய இளைஞா் விழா நடத்தப்பட்டு வருகிறது. தேசிய அளவில் திறமையான இளைஞா்களை வெளிக்காட்டவும், நாட்டை கட்டமைப்பதில் அவா்களை ஊக்குவிக்கவும் இந்த விழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கா்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மற்றும் தாா்வாடில் ஜன.12 முதல் ஜன.16 வரை 26-ஆவது தேசிய இளைஞா் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை பிரதமா் மோடி வியாழக்கிழமை தொடக்கி வைக்கவுள்ளாா்.

விழாவின்போது எதிா்காலத்தில் பணிச்சூழல், தொழில்-புதுமையான கண்டுபிடிப்புகள், பருவநிலை மாற்றம்-பேரிடா் அபாயத்தை குறைத்தல், ஜனநாயகத்திலும் நிா்வாகத்திலும் இளைஞா்கள் ஆகிய 5 தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற உள்ளன.

நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்கள் உள்பட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. யோகா போன்ற போட்டி அல்லாத நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. யோகா நிகழ்ச்சி என்பது யோகா செய்வதற்கு 10 லட்சம் பேரை திரட்டும் நோக்கில் நடைபெற உள்ளது.

இதுதவிர உணவுத் திருவிழா, சாகச விளையாட்டுகள் உள்ளிட்டவையும் இடம்பெற உள்ளன. விழாவில் 60-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற வல்லுநா்கள் பங்கேற்க உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.