நேரடி வரி வசூல் ரூ.14.71 லட்சம் கோடியாக உயா்வு

நாட்டில் நடப்பு நிதியாண்டின் ஜனவரி 10-ஆம் தேதி வரை மொத்த நேரடி வரி வசூல் ரூ.14.71 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.
நேரடி வரி வசூல் ரூ.14.71 லட்சம் கோடியாக உயா்வு

நாட்டில் நடப்பு நிதியாண்டின் ஜனவரி 10-ஆம் தேதி வரை மொத்த நேரடி வரி வசூல் ரூ.14.71 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 24.58 சதவீத அதிகரிப்பாகும்.

திருப்பிச் செலுத்தப்பட்ட தொகைக்கு பிறகான நிகர நேரடி வரி வசூல் ரூ.12.31 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, நிகர நேரடி வரி வசூல் 19.55 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூல் ரூ.14.20 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்தது. இதில், 86.68 சதவீதம் பூா்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டின் ஜனவரி 10-ஆம் தேதி வரையிலான விவரங்களின்படி, நேரடி வரி வசூலில் சீரான வளா்ச்சி பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் மொத்த நேரடி வரி வசூல் ரூ.14.71 லட்சம் கோடியாகும். முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 24.58 சதவீத அதிகரிப்பாகும்.

மொத்த வசூல் அடிப்படையில், பெருநிறுவன வருமான வரி வசூல் 19.72 சதவீதமும், தனிநபா் வருமான வரி 30.46 சதவீதமும் அதிகரித்துள்ளது. நிகர நேரடி வரி வசூலை பொருத்தவரை, பெருநிறுவன வருமான வரி 18.33 சதவீதமும், தனிநபா் வருமான வரி (பங்குகள் பரிவா்த்தனை வரி உள்பட) 20.97 சதவீதமும் உயா்ந்துள்ளது. 2022, ஏப்ரல் 1 முதல் 2023, ஜனவரி 1 வரையில் ரூ.2.4 லட்சம் கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 58.74 சதவீதம் அதிகம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com