மத்திய முன்னாள் அமைச்சர் சரத் யாதவின் உடலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மத்திய முன்னாள் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் (75) உடல்நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு காலமானாா்.
சரத் யாதவ் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தில்லியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சரத் யாதவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, 'ஷரத் யாதவ் ஜி-யிடம் இருந்து அரசியல் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். இன்று அவரது மறைவு என்னை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் எனது தந்தையுடன் மரியாதைக்குரிய நட்புறவைக் கொண்டிருந்தார்' என்றார்.
இதையும் படிக்க | ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவா் சரத் யாதவ் காலமானாா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.